சர்வதேச பிரதிநிதித்துவக்கான அரசாங்க கட்சியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களை பெயரிடுதல்
• பொதுநலவாய பாராளுமன்ற சங்கம் .
• அனைத்து பாராளுமன்ற ஒன்றியம்.
• சார்க் பாராளுமன்ற சங்கம்.
சட்டமூலம்
2020.10.06 ஆம் திகதிய 2196/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அரசாங்கத்தின் சட்ட மூலங்களை அமைச்சரவையின் அமைச்சர் ஒருவருக்கு மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.
சட்டமூலம் சட்ட வரைஞரினால் ஆக்கப்பட்ட பின்னர் அது சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதுடன் சட்டமா அதிபர் அதன் உள்ளடக்கம் அரசியலமைப்புக்கு இசைந்தொழுகும் தன்மையினை பரிசீலிப்பார்.
சட்டமா அதிபரின் சான்றிதழ் கிடைத்த பின்னர் சட்டமூலம் அங்கீகாரத்திற்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்த பின்னர் சம்பந்தப்பட்ட அமைச்சு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும்.
அரசியலமைப்பின் 78 ஆம் உறுப்புரையின் பிரகாரம், பாராளுமன்றத்தின் ஒழுங்கு பத்திரத்தில் இடப்படுவதற்கு குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு முன்னர்(07) வர்த்தமானியில் வெளியிடப்படுதல் வேண்டும்"
“அதனையடுத்து சட்டமூலம் முதலாம் மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்."
ஆயினும், அரசியலமைப்பின் 121 ஆம் உறுப்புரைக்கு அமைவாக ஒரு சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் நியாயாதிக்க அதிகாரம் செயற்படும் சந்தர்ப்பத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் வழங்கப்படும் வரை அல்லது அத்தகைய ஆற்றுப்படுத்தலின் அல்லது மனுவின் திகதியிலிருந்து மூன்று வார காலம் கடக்கும் வரை அல்லது இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ அது வரை மேற்படி சட்டமூலம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக் கூடாது.
ஒரு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு பின்வரும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
ஒழுங்கு விதிகள் / விதிகள் / கட்டளைகள்
2020.10.06 ஆம் திகதிய 2196/27 ஆம் இலக்கமுடைய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக ஒழுங்கு விதிகள், விதிகள் மற்றும் கட்டளைகளை அமைச்சரவையின் அமைச்சருக்கு மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.
அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் கீழ் அல்லது வேறு ஏதேனும் ஒரு சட்டத்தின்கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் / விதிகள் / கட்டளைகள் பின்வரும் ஏதேனும் ஒரு வகுதிக்குள் உள்ளடங்கும்.
தீர்மானங்கள் / முடிவுகள்
2020.10.06 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி தீர்மானங்கள் மற்றும் முடிவுகளை அமைச்சரவை அமைச்சர் ஒருவரினால் மாத்திரம் முன்வைக்க முடியும்.
பாராளுமன்றத்தின் அங்கீகாரம் தேவைப்படும் அனைத்து தீர்மானங்கள் / முடிவுகளுக்கு அமைச்சரவையின் முன்கூட்டிய அங்கீகாரம் இருத்தல் வேண்டும்.
தீர்மானம் / முடிவு அனுமதிக்காக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் போது பின்வரும் ஆவணங்களை இந்த அலுவலகத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
குறை நிரப்பு மதிப்பீடு
2020.10.06 ஆம் திகதிய 2196/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானயின் பிரகாரம் குறை நிரப்பு மதிப்பீடு ஒன்றை அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு மாத்திரமே சமர்ப்பிக்க முடியும்.
ஏதேனும் எதிர்பாராத செலவினத்துக்காக நிதி ஒதுக்கீட்டுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் ஏதேனும் ஒரு அமைச்சு முதலாவதாக அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டு நிதிப் பிரமாணம் 74 இன் கீழ் குறைநிரப்பு மதிப்பீடாக தங்களது வேண்டுகோளை பாராளுமன்றத்துக்கு முன் வைத்தல் வேண்டும்.
குறை நிரப்பு மதிப்பீடு ஒன்றை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் போது சபை முதல்வரின் செயலாளர் ஊடாக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்திற்கு பின்வரும் ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.
துணை உதவிச் சேவை மற்றும் அவசர தேவைகள் பொறுப்பு கருத் திட்டத்தின் கீழ் மேலதிக விலக்கீடுகள்
அதிமேதகு ஜனாதிபதியின் விடயப் பரப்பின் கீழ் நேரடியாகவே வரும் பணிகளுக்கு ஏதுவான அரசாங்க அலுவல்கள் தொடர்பான விடயங்கள்
அதிமேதகு சனாதிபதியின் விடயப் பரப்பின் கீழ் நேரடியாகவே வரும் ஏதேனும் விடயம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பமொன்றில் அது தொடர்பாக கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பிலான குறிப்பிட்ட விடயங்கள் மீது பின்வரும் செயல் நடைமுறை பின்பற்றப்படுதல் வேண்டும்.
அரசாங்க அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் ஆணைக்குழுக்களின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அச்சுப் பிரதிகளுக்கு மேலதிகமாக, மும்மொழியிலும் PDF செய்யப்பட்டு முறையான மூன்று ஆவணக்கோப்புகளாக (Folders) தயார் செய்யப்பட்டுள்ள மென்பொருளை உள்ளடக்கிய இரு (02) இறுவட்டுக்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அச்சுப் பிரதிகளுக்கு மேலதிகமாக, மும்மொழியிலும் PDF செய்யப்பட்டு முறையான மூன்று ஆவணக்கோப்புகளாக (Folders) தயார் செய்யப்பட்டுள்ள மென்பொருளை உள்ளடக்கிய இரு (02) இறுவட்டுக்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
மேலட்டையின் மாதிரி வடிவம் இணைப்பு 1இல் காட்டப்பட்டுள்ளது.
கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்கு கூற்றுக்கள்
பல்வேறு சட்டங்களின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்கு கூற்றுக்களை குறிப்பிட்ட சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
மேலும், மேற்குறிப்பிடப்பட்ட சகல வருடாந்த அறிக்கைகளும் கணக்கு கூற்றுக்களும் உரிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
வருடாந்த அறிக்கையில் சில அறிக்கைகளை குறிப்பிட்ட சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியது மாத்திரமென்பதுடன், ஏனைய அறிக்கைகளை பாராளுமன்றத்தில் அங்கீகரித்தல் வேண்டும்.
ஆகையால், சமர்ப்பிக்க உத்தேசிக்கும் வருடாந்த அறிக்கையினை மேற்குறிப்பிட்ட எந்தத் தொகுதியில் சமர்ப்பித்தல் வேண்டுமென்பது குறித்து அமைச்சின் செயலாளர் அறிந்திருக்க வேண்டுமென்பதுடன், இது குறித்து இந்த அலுவலகத்துக்கும் தெரிவித்தல் வேண்டும்.
ஒவ்வொரு தொகுதியின் கீழும் வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கையில் தேவைப்படும் ஆவணங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன
இந்த அறிக்கைகளை அச்சிடுகையில் குறைந்த செலவில் இதனை மேற்கொள்வதற்கு அனைத்து நிறுவனங்களும் இயலுமானவரையில் கவனமாயிருத்தல் வேண்டும்.
வருடாந்த அறிக்கைகளை கையளிப்பதற்கு வருவதற்கு முன்னர் 011 2777467 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட விடயத்து பொறுப்பான உத்தியோகத்தரிடத்தில் வருகை தரவேண்டிய திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டிய வருடாந்த அறிக்கைகள்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அச்சுப் பிரதிகளுக்கு மேலதிகமாக, மும்மொழியிலும் PDF செய்யப்பட்டு முறையான மூன்று ஆவணக்கோப்புகளாக (Folders) தயார் செய்யப்பட்டுள்ள மென்பொருளை உள்ளடக்கிய இரு (02) இறுவட்டுக்களும் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
அச்சு மற்றும் மென்பொருட் பிரதிகளின் மேலட்டையின் மாதிரி வடிவம் இணைப்பு 2இல் காட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு மாத்திரம் தேவையான ஆண்டறிக்கைகள்
• பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு மாத்திரம் தேவையான அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது பின்வரும் ஆவணங்கள் இந்த அலுவலகத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
A. வருடாந்த அறிக்கைகள் மற்றும் கணக்கு கூற்றுக்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை நிரூபம் மற்றும் அமைச்சரவை தீர்மானத்தின் பிரதி;
B. நிதி மற்றும் கணக்காய்வு தரவுகளை உள்ளடக்கிய வருடாந்த அறிக்கையானது மும்மொழிகளிலும் ஒரே புத்தகத்தில் அச்சிடப்பட்டிருப்பின், இருநூற்றி எழுபது பிரதிகளும் (270), ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறாக அச்சிடப்பட்டிருப்பின், சிங்கள மொழியில் இருநூற்றி பத்து (210) பிரதிகளும், தமிழ் மொழியில் ஐம்பத்தி ஐந்து (55) பிரதிகளும், ஆங்கில மொழியில் தொன்னூற்றி ஐந்து (95) பிரதிகளுமாக சபை முதல்வரின் அலுவலகத்துக்கு முன்வைக்கப்படுதல் வேண்டும்.
C. மேற்குறிப்பிடப்பட்டுள்ள அச்சுப் பிரதிகளுக்கு மேலதிகமாக, மும்மொழியிலும் PDF செய்யப்பட்டு முறையான மூன்று ஆவணக்கோப்புகளாக (Folders) தயார் செய்யப்பட்டுள்ள மென் பிரதிகளை உள்ளடக்கிய இரு (02) இருவட்டுக்களும் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
ஆண்டறிக்கையின் அச்சு மற்றும் மென் பிரதிகளின் மேலட்டையின் மாதிரி வடிவம் இணைப்பு 2 இல் காட்டப்பட்டுள்ளது.
வரவு- செலவு குழுநிலையில் சமர்ப்பிக்கப்படும் முன்னேற்ற அறிக்கை
வரவு - செலவு குழுநிலையின்போது சகல அமைச்சுகளும் குறிப்பிட்ட அமைச்சின் முன்னேற்ற அறிக்கையினை, குறிப்பிட்ட அமைச்சின் செலவுத் தலைப்பு விவாதத்திற்கு எடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திகதிக்கு இரு வாரங்களுக்கு முன்னதாகவேனும் சமர்ப்பித்தல் வேண்டும்.
B. முன்னேற்ற அறிக்கையானது மும்மொழிகளிலும் ஒரே புத்தகத்தில் அச்சிடப்பட்டிருப்பின், இருநூற்றி எழுபது பிரதிகளும் (270), ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறாக அச்சிடப்பட்டிருப்பின், சிங்கள மொழியில் இருநூற்றி பத்து (210) பிரதிகளும், தமிழ் மொழியில் ஐம்பத்தி ஐந்து (55) பிரதிகளும், ஆங்கில மொழியில் தொன்னூற்றி ஐந்து (95) பிரதிகளுமாக சபை முதல்வரின் அலுவலகத்துக்கு முன்வைக்கப்படுதல்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அச்சுப் பிரதிகளுக்கு மேலதிகமாக, மும்மொழியிலும் PDF செய்யப்பட்டுள்ள மென்பொருளை உள்ளடக்கிய இரு (02) இறுவட்டுக்களும் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
அச்சு மற்றும் மென்பொருள் பிரதிகளின் மேலட்டையின் மாதிரி வடிவம் இணைப்பு 3இல் காட்டப்பட்டுள்ளது.
• அராங்க கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 119(4), அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 120(40 மற்றும் அராங்க நிதி பற்றிய குழுவினால் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121இன் கீழ் கோரப்படும் அறிக்கைகள்
மேற்குறிப்பிட்ட அறிக்கைகள் உரிய அமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளரது கையொப்பத்துடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமென்பதுடன், இத்துடன் பின்வரும் பத்திரங்கள் பாராளுமன்ற சபைமுதல்வர் அலுவலகத்துக்கு வழங்கப்படுதலும் வேண்டும்.
A. சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் அதிமேதகு ஜனாதிபதியின் கீழான ஏனைய அரசாங்க நிறுவனங்களின் அறிக்கைகளை கௌரவ பிரதமரின் கையொப்பத்துடனும், ஏனைய சகல அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் அறிக்கைகளை உரிய அமைச்சரவை அமைச்சரின் கையொப்பத்துடனும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி, சபைமுதல்வரின் செயலாளரின் ஊடாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை விழித்து முன்வைக்கப்பட்டுள்ள கடிதம்:
B. மேற்குறிப்பிடப்பட்டுள்ள அறிக்கைகளின் அச்சுப் பிரதிகள், மும்மொழிகளிலும் ஒரே புத்தகத்தில் அச்சிடப்பட்டிருப்பின், இருநூற்றி எழுபது பிரதிகளும் (270), ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறாக அச்சிடப்பட்டிருப்பின், சிங்கள மொழியில் இருநூற்றி பத்து (210) பிரதிகளும், தமிழ் மொழியில் ஐம்பத்தி ஐந்து (55) பிரதிகளும், ஆங்கில மொழியில் தொன்னூற்றி ஐந்து (95) பிரதிகளுமாக சபை முதல்வரின் அலுவலகத்துக்கு முன்வைக்கப்படுதல் வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அச்சுப் பிரதிகளுக்கு மேலதிகமாக, மும்மொழியிலும் PDF செய்யப்பட்டு முறையான மூன்று ஆவணக்கோப்புகளாக (Folders) தயார் செய்யப்பட்டுள்ள மென்பொருளை உள்ளடக்கிய இரு (02) இறுவட்டுக்களும் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
C. அச்சுப் பிரதிகளின் மேலட்டையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் குறிப்பிட்ட அமைச்சு / திணைக்களம் / ஆணைக்குழுவின் பெயர் மற்றும் வருடம் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.
D. குறிப்பிட்ட அமைச்சின் மேற்பார்வையின் கீழ் ஒரு நிறுனத்துக்கு அதிகமாகக் காணப்படும் பட்சத்தில், சகல நிறுவனங்களுக்குமான அவதானிப்புகள் மும்மொழிகளிலும் ஒரு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருத்தல் வேண்டுமென்பதுடன், குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயர் பட்டியலும் முன்வைக்கப்படுதல் வேண்டும்.
அறிக்கையின் மேலட்டையானது பின்வரும் மாதிரிக்கு அமைய தயார் செய்யப்படுதல் வேண்டும்.
பாரளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் ஏனைய அறிக்கைகள்
ஏனைய அறிக்கைகள் ( மேற்குறிப்பிடப்படாதது உதாரணம் - ஆணைக்குழுக்களினால் முன்வைக்கப்படும் அறிக்கைகள், அமைச்சினால் குறிப்பிட்டதொரு நடப்புசார் பிரச்சினை / விடயம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள்) பின்வருமாறு முன்வைக்கப்படுதல் வேண்டும்.
A. பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி, உரிய அமைச்சரவை அமைச்சரின் கையொப்பத்துடன் சபைமுதல்வரின் செயலாளரின் ஊடாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை விழித்து முன்வைக்கப்பட்டுள்ள கடிதம்; (குறிப்பிட்ட அறிக்கை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு முன்வைக்கப்படுதல் வேண்டுமா இன்றேல் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமா என்பது குறித்து குறிப்பிட்ட கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்)
B. மும்மொழியிலும் ஒரே புத்தகத்தில் அச்சிடப்பட்டிருப்பின், இருநூற்றி எழுபது பிரதிகளும் (270), ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறாக அச்சிடப்பட்டிருப்பின், சிங்கள மொழியில் இருநூற்றி பத்து (210) பிரதிகளும், தமிழ் மொழியில் ஐம்பத்தி ஐந்து (55) பிரதிகளும், ஆங்கில மொழியில் தொன்னூற்றி ஐந்து (95) பிரதிகளுமாக சபை முதல்வரின் அலுவலகத்துக்கு முன்வைக்கப்படுதல் வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அச்சுப் பிரதிகளுக்கு மேலதிகமாக, மும்மொழியிலும் PDF செய்யப்பட்டு முறையான மூன்று ஆவணக்கோப்புகளாக (Folders) தயார் செய்யப்பட்டுள்ள மென்பொருளை உள்ளடக்கிய இரு (02) இறுவட்டுக்களும் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். 1
C. அச்சிடப்பட்டுள்ள பிரதிகளின் மேலட்டையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் குறிப்பிட்ட அமைச்சு / திணைக்களம்/ ஆணைக்குழுவின் பெயர் குறிப்பிடப்பட்டிருத்தல் வேண்டும்.
ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள்
அரசியலமைப்பின் 157வது உறுப்புரையின் பிரகாரம், இலங்கை அரசாங்கத்துக்கும் வெளிநாட்டு அரசாங்கமொன்றுக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் சர்வதேச ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகளுக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்றத்துக்கு அவை சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கையில், பின்வரும் ஆவணங்களை இந்த அலுவலகத்துக்கு முன்வைத்தல் வேண்டும்:
<A. பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை நிரூபம் மற்றும் அமைச்சரவை தீர்மானத்தின் பிரதி;
B. ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகள் அரசியலமைப்பின் உறுப்புரைகளுடன் இசைவாக்கம் பெறுகின்றனவா என்பது பற்றிய சட்டமா அதிபரின் சான்றிதழின் பிரதி;
அமைச்சரின் கையொப்பத்துடன் சபைமுதல்வரின் செயலாளரின் ஊடாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்தை விழித்து முன்வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதி;